• Tue. Dec 17th, 2024

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி; காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

Jul 31, 2021

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெற்றி கூட பெறாத நிலையில், இந்திய மகளிர் அணி, கடந்த போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்திய அணி தனது முதல் மூன்று போட்டிகளில் நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவியது.

ஒவ்வொரு குரூப்பிலும் 6 அணிகள் இடம்பிடித்துள்ள நிலையில், முதல் 4 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். குரூப் ஏ-வில் அயர்லாந்து 4வது இடத்திலும், இந்திய அணி 5வது இடத்திலும் இருந்தது.

இந்த சூழலில், இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து இன்று விளையாடியது. அதில், வந்தனாவின் ஹாட்ரிக் கோலின் உதவியுடன் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு இந்தியா முன்னேறியிருந்தது. இருப்பினும், இன்று நடக்கும் பிரிட்டன் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவை பொறுத்தே, காலிறுதிக்கான வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைக்கும் என்றிருந்தது.

அதன்படி, பிரிட்டனுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி தோல்வியை தழுவிய நிலையில், இந்திய மகளிர் அணி 4வது அணியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.