• Wed. Feb 5th, 2025

இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திய மாணவர்களுக்கு பணப் பரிசு!

Aug 7, 2021

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று எதிராக இரண்டு தடுப்பூசி அளவுகளை செலுத்திய மாணவர்களுக்கு, பணப் பரிசு வழங்கும் திட்டமொன்றை ஆங்கில பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்தியள்ளது.

இதன்படி தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள், இந்தப் போட்டியில் 5,000 பவுண்டுகள் பணப் பரிசை வெல்ல முடியும்.

இளைஞர்களிடையே தடுப்பூசி வீதங்களை உயர்த்துவதற்கான சமீபத்திய ஊக்கமாக, இந்த அறிவிப்பை சசெக்ஸ் பல்கலைக்கழகத் திட்டம் வெளியிட்டுள்ளது.

அனைத்து மாணவர்களும் குழுக்கள் முறையில் சேர்க்கப்படுகிறார்கள், ஐந்து வெற்றியாளர்கள் தங்களுக்கான 5,000 பவுண்டுகள் பணப் பரிசை வெல்ல முடியும்.