நாட்டில் அடுத்துவரும் நாட்களில் கொரோனா அபாயம் மேலும் தீவிரமடையுமானால் நாட்டை சில நாட்களுக்கு முழுமையாக முடக்க வேண்டிய நிலை ஏற்படுமென ஆளுங்கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவே இதனைத் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில், நாட்டை முடக்குவது எளிதல்ல, ஆனால் தொற்றுநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற குறுகிய காலத்திற்கு முடக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.