• Sat. Dec 21st, 2024

நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

Aug 9, 2021

தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல மாடலான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர். தொடர்ந்து படங்கள் சிலவற்றில் நடித்து வரும் மீரா மிதுன் அண்மை காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்த மீரா மிதுன் அதில் தாழ்த்தப்பட்ட சமூகம் ஒன்றை கேவலமாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.