• Tue. Feb 4th, 2025

ரஜினி, விஜய், கமலைத் தொடர்ந்து டாப் மாஸ் ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!

Aug 13, 2021

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில், தனது திறமையால் முன்னேறி ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.

இவர் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து அசத்தக்கூடியவர். இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி தற்போது வில்லனாகவும் மிரட்டி வருகிறார். இவர் ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் உப்பென்னா என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

விஜய்சேதுபதி தற்போது கமலின் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தெலுங்கில் மாஸ் நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணாவின் படத்தில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.