• Wed. Dec 18th, 2024

சமந்தாவை சந்தித்த பிரபலங்கள் – விவாகரத்திற்கு ஆறுதலா?

Sep 20, 2021

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. ஆனால் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். அதற்கு மாமியார் வீட்டிலும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது.

ஆனால், அங்கு தான் பிரச்சனையே வெடித்தது. நடிப்பு சுதந்திரத்தை தாராளமாக பயன்படுத்திக்கொண்ட சமந்தா தி பேமிலி மேன் 2 தொடரில் மிகவும் மோசமான காட்சிகளில் நடித்ததால் குடும்பத்திற்குள் அவப்பெயர் உண்டாகிவிட்டதாக சமந்தாவை கணவர் கடிந்துக்கொண்டதாகவும் அதனால் அவர் வீட்டில் இருந்து வெளியேறியதோடு சமந்தா அக்கேனி என்ற தனது பெயரை எஸ் என்று மட்டும் மாற்றிக்கொண்டதாக செய்திகள் வெளியாகியது.

மேலும் அவர் கணவரை பிரிய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் இதுபற்றி இருவரும் இதுவரை வாய் திறந்து பேசவில்லை. இதற்கிடையில் வழிமறித்து பத்திரிகையாளர்கள் விவகாரத்து குறித்த செய்திகளை கேள்வியாக கேட்டால் கொந்தளித்துவிடுகின்றனர்.

இந்நிலையில் சமந்தாவை நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் சந்தித்து எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

ஒருவேளை கணவரை பிரிந்த சோகத்தில் இருக்கும் சமந்தாவுக்கு ஆறுதல் சொல்ல இவர்கள் போனார்களோ? என இணையத்தளங்கள் செய்திகள் எழுத ஆரம்பித்துவிட்டது.