• Thu. Jan 2nd, 2025

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் – பாகிஸ்தானிடம் இந்தியா படுதோல்வி

Oct 25, 2021

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 151 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 152 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதனை அடுத்து பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அப்ரிடி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணி முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது என்பதும் அது மட்டுமின்றி ஒரு விக்கெட்டை விட இந்திய பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை என்ற மோசமான சாதனையும் நேற்று நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இதுவரை தனது விக்கெட்டை இழக்காத விராட் கோலி நேற்று விக்கெட்டை இழந்தமை குறிப்பிடத்தக்கது.