ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான உதவிப் பொதுச் செயலாளர் நாயகம் மொஹமட் காலித் கியாரி இன்று செவ்வாய்க்கிழமை(23) இலங்கை வருகிறார். எதிர்வரும் 25 ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார்.
இலங்கை வருகை தரும் அவர் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், மதத் தலைவர்கள் மற்றும் இராஜதந்திர சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்திப்பார் எனத் தெரிய வருகின்றது.
கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.