சோம்பு ஒரு அற்புத மருத்துவம் குணம் கொண்ட உணவு பொருள். பெரும்பாலும் இந்தியர்கள் உணவில் அடிக்கடி சோம்பு சேர்க்கும் பழக்கம் உள்ளது. அப்படி தினமும் உணவில் சோம்பு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பிரியாணி, அசைவ உணவு போன்ற ஹெவியான உணவுகளை உண்ட பின் இறுதியாக சோம்பு எடுத்துக் கொள்வார்கள். காரணம், அது எப்பேர்பட்ட உணவையும் எளிதில் செரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.
வெயில் காலங்களில் சமைக்கப்படும் உணவுகளில் சோம்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதன் காரணம் அதன் குளிர்ச்சித் தன்மைக்காகத்தான்.
உடல் சூட்டைத் தணிக்க வெறும் வாயில் சோம்பை மென்று தின்பதால் சூடு தணியும். ஆரோக்கியமான குழந்தை அவ்வப்போது வற்று வலியால் துடித்தால் உடனே சோம்பு கொடுங்கள். வயிறு களிமண் போல் கணமாக இருந்தாலோ, வயிற்று வலி இருந்தாலோ வலி நிவாரணியாக சோம்பு செயல்படும்.
வாயுப் பிரச்சனை உடல் அஜீரணத்தால் ஏற்படக் கூடியது. சோம்பு வயிற்றுக்குச் செல்லக்கூடிய இரத்த ஓட்டத்தை சரி செய்து ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதனால் வாயு எரிச்சலும் குணமாகும்.
நீரிழிவு நோய் கொண்டோருக்கு சோம்பை கொதிக்க வைத்து அருந்தச் சொல்வார்கள். காரணம், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரி செய்து சம அளவில் வைத்துக் கொள்ளும்.
மூட்டு வலி, தசை வலிகளுக்கு சோம்பு சிறந்த வலி நிவாரணி. இதை ஆய்விலும் கண்டறிந்துள்ளனர். சோம்பு உட்கொண்ட பின் உடலும் புத்துணர்வாக இருக்கிறது.
சோம்பு டீயை நீங்கள் தினமும் பருகுவதால் உடலில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். டீ, காஃபிக்கு சோம்பு நல்ல மாற்றாக இருக்கும். இதை அருந்துவதால் ஃப்ரெஷ்ஷாக உணர்வீர்கள். உடலின் நச்சுகளை நீக்கி நல்ல கிளின்சராக சோம்பு செயலாற்றுகிறது.