• Sat. Nov 16th, 2024

குளிர்காலத்தில் பப்பாளி பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும்

Dec 7, 2021

பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டாலே அதற்கான சரியான உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டியது முக்கியமான ஒன்று. அந்த வகையில் பப்பாளி பழத்தை குளிர்காலத்தில், இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் (பீட்டா கரோட்டின்) உள்ளது.

இது தோல் நோய்களுக்கும், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி, ஈ மற்றும் ஏ போன்ற தாதுக்களுக்கும் உதவக்கூடியது. மேலும் இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.

இது மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும். செரிமானத்தை மேம்படுத்துகிறது. இருமல் மற்றும் சளிக்கு பயனுள்ளதாக இருக்கும். மாதவிடாய் வலியை குறைக்கிறது. வீக்கத்தைக் குறைக்கிறது.

வலி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சிறந்தது. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. நச்சு நீக்கத்திற்கு சிறந்தது. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதயத்திற்கு நல்லது. நன்கு பழுத்த பப்பாளி மலச்சிக்கலுக்கு சிறந்தது.

வெறும் வயிற்றில் ஒரு கப் பப்பாளி சாப்பிடுவது வயிற்றுக்கு பல நன்மைகளை செய்கிறது. இது செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை அழித்து குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது.

மேலும் வயிறு உப்புசம், வயிறு கோளாறு பிரச்சினைகளை சரி செய்யவும் பப்பாளி உதவுகிறது. பப்பாளி உங்கள் பசியை கட்டுப்படுத்துவதோடு நீண்ட நேரம் வயிற்றை திருப்தியாக உணர வைக்கிறது.

பப்பாளியில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பதால் இது தமனிகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

நமக்கு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க பப்பாளி உதவுகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இனி உங்களது உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்.