• Sun. Dec 1st, 2024

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா

Dec 27, 2021

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஜாஸ் அகமது 68 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார்.

இந்திய அணி தரப்பில் ராஜ்வர்தன் , கௌஷல் தாம்பே , விக்கி மற்றும் ராஜ் பாவா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹர்னூர் சிங் – ரகுவன்ஷி ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.

ஹர்னூர் சிங் 65 ரன்களும் , ரகுவன்ஷி 35 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த ராஜ் பாவா – கௌஷல் தாம்பே நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

இறுதியில் இந்திய அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.