• Thu. Nov 21st, 2024

உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் வழிமுறைகள்

Jan 20, 2022

இலவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

உலர்ந்த ரோஜா இதழ், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் காலை, மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு கரையும்.

பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு, துவரம்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் இளைக்கும். பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல் சேர்த்து அவித்து கடைந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும்.

எலுமிச்சைகள் அவற்றின் சுத்திகரிப்பு பண்புகளுக்கு நன்கு அறியப்பட்டவை. எலுமிச்சை சிறந்த கல்லீரல் நச்சு நீக்கி, மற்றும் கல்லீரல் உணவை பதப்படுத்தும் மற்றும் கொழுப்பை கரைக்க பெரும்பங்கு வகுக்கிறது . எலுமிச்சை உடலில் கொழுப்பு சேராமல் இருக்க உதவுகிறது.

நன்னாரி வேரை நெல்லிக்காய் சாற்றில் ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடல் கொழுப்பு கரையும்.

ஆப்பிள்கள் நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளில் ஒன்றாகும். தொப்பையில் உள்ள கொழுப்பைக் குறைப்பதில் நார்ச்சத்து முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதாவது நாளொன்றுக்கு அதிகம் கரையக்கூடிய கொழுப்பை குறைக்கும்.