• Sun. Dec 22nd, 2024

சென்னையில் தோனி!

Jan 29, 2022

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் வீரர்களின் ஏலம் விரைவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தல தோனி ஏலம் எடுப்பது குறித்து ஆலோசனை செய்ய நேற்றிரவு சென்னை வந்துள்ளார்.

2022ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் பங்கேற்க இருக்கும் நிலையில் அனைத்து அணிகளுக்குமான ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்காகவும் ஏலத்தில் எந்தெந்த வீரரை தேர்வு செய்வது என்பது குறித்து ஆலோசிப்பதற்காகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னை வந்தடைந்தார்
ஏலத்தில் எந்தெந்த வீரர்களை எடுக்கலாம் என்பது குறித்து அணி நிர்வாகத்துடன் இன்று அவர் ஆலோசனைகள் ஈடுபடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸை பொருத்தவரை தோனி, ருத்ராஜ், ஜடேஜா மற்றும் மொயின்கான் ஆகிய நான்கு வீரர்கள் தக்க வைக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.