முட்டையை பச்சையாக சாப்பிடும் பலக்கும் இளைஞர்கள் பலருக்கு உண்டு. இது ஆபத்து என்பது பலரும் அறியாத உண்மை. முட்டைகள் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஆரோக்கியமானவை. முட்டைகளிலிருந்து உங்களுக்கு 13 வெவ்வேறு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.
ஆனால் இப்போதெல்லாம் முட்டையின் மஞ்சள் நிறப் பகுதியைத் தூக்கி எறிந்துவிட்டு, அது ஆரோக்கியமற்றது மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் என்ற தவறான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. ஆது மட்டும் இன்றி பச்சையாக குடிக்கும் பழக்கமும் ஏற்பட்டுள்ளது.
சமைக்காத முட்டையில் சால்மோனெல்லா உள்ளது. இது வயிற்று பிரச்சனையை உருவாக்கும். சில நேரங்களில் இது காய்ச்சல் வைரஸைக் கூட ஏற்படுத்தக்கூடும். எனவே சாப்பிடுவதற்கு முன்பு முட்டைகளை நன்றாக வேகவைத்து சமைக்க வேண்டியது அவசியம். முடிந்த வரை முட்டையை சமைத்து சாப்பிடுவது தான் நல்லது.
ப்ரிட்ஜில் வைக்கப்பட்ட முட்டையை கூட குளிர் போன பிறகு சமைத்து சாப்பிடுங்கள்.