• Fri. Jan 10th, 2025

6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி

Apr 2, 2022

15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரக பஞ்சாப் அணி விளையாடியது. இதில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

மும்பையிலுள்ள வான் கடே மைதனத்தில் நடைபெரும் இப்போட்டியில் முதலில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

இதில், 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா அணி ரஸ்ஸல் 70 ரன்களும், ஷரேயாஸ் அய்யர் 26 ரன்களும், சாம் பில்லிங் 24 ரன்களும், எடுத்து அணியில் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

எனவே கொல்கத்தா அணி 14.3 ஓவரகளில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.