• Thu. Nov 21st, 2024

ஹாலிவுட் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த வில் ஸ்மித்

Apr 2, 2022

ஹாலிவுட் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் கழகத்திலிருந்து தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித், ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தில் நடந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், King Richard படத்திற்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

அவரது மனைவியை கேலி செய்யும் விதமாக காமெடி நடிகர் கிறிஸ் ராக் பேசியதற்காக மேடையில் வைத்து ஸ்மித் அவரை முகத்தில் அரைந்தார்.

இந்த சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை கிளப்பியது. இது நடந்த அரை மணி நேரத்திலேயே, விருதை வாங்கி விட்டு மிக உருக்கமாக பேசியதுடன் அவரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்கார் விழாவில் ஸ்மித் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சி அளிப்பது, வலியானது மற்றும் மன்னிக்க முடியாதது என சினிமா அகாடமியும் தெரிவித்துள்ளது.

இது பற்றிய ஸ்மித் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகாடமியின் நம்பிக்கையை நான் உடைத்து விட்டேன். மற்ற நடிகர், நடிகைகளின் பரிந்துரைகள், வெற்றியாளர்களின் கொண்டாட்டம் ஆகியவற்றிற்கான வாய்ப்பை நான் கெடுத்து விட்டேன்.

நான் மிகவும் மன வேதனை அடைகிறேன்.அதனால் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் கழகத்தின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். அகாடமி எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஸ்மித்தின் ராஜினாமா பற்றி திரைப்பட அகாடமியின் தலைவர் டேவிட் ரூபின் கூறுகையில், ஸ்மித்தின் ராஜினாமாவை குழு ஏற்றுக் கொண்டது.

ஆனாலும் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் தொடரும். ஸ்மித் மீது கூடுதல் தடைகள் விதிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி ஏப்ரல் 18 ம் தேதி நடக்கும் சங்கத்தின் அடுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாம்.