• Tue. Jan 28th, 2025

மீண்டும் இணையும் நாக சைதன்யா – சமந்தா

Apr 4, 2022

நாக சைதன்யா – சமந்தா மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

திரையுலகின் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் போது, முன்னணி நடிகை சமந்தாவும், நாகசைதயன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

விவாகரத்து செய்த பின், இருவருக்கும் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து இருவரும் பிஸியாக நடித்துவருகின்றனர்.

இந்நிலையில், நாக சைதன்யாவும்- சமந்தாவும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி, சமந்தா மற்றும் நாக சைதன்யாவிடம் ஒரு கதை கூறியுள்ளார். அதில் இருவரும் சேர்ந்து நடிக்கும்படி கூறியுள்ளார். இதை இருவரும் ஏற்றுள்ளனர். எனவே இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சமந்தா – நாகசைதன்யா இப்படத்தில் இணைந்து நடிப்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதேபோல் இருவரையும் நிஜ வாழ்க்கையில் ஒன்று சேர்த்து வைக்கவும் அவர்களின் நண்பர்களும் உறவினர்களும் முயற்சித்து வருகின்றனர்.