காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன், ‘சாணிக் காயிதம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகி உள்ளார்.
இப்படத்தை புதுமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘சாணிக்காயிதம்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அனைவரையும் கவர்ந்த அந்த புகைப்படத்தை ரஜினிகாந்த்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா அவரை பாராட்டி பதிவிட்டிருந்தார்.
அதில், “வாவ்…செல்வா அத்தான்…” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை அனைவரும் பாராட்டி வைரலாக்கி வருகின்றனர்.