• Mon. Dec 23rd, 2024

4 அல்ல… 40 திருமணம் கூட செய்துகொள்வேன்; வனிதா அதிரடி

Jul 24, 2021

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை வனிதா, கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார்.
அதன் பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார்.

சில தினங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமாரும், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனும் மாலை மாற்றிக் கொண்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பார்த்த ரசிகர்கள் வனிதா 4வது திருமணம் செய்துக் கொண்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் பிக்கப் டிராப் என்ற படத்தில் தான் நடிப்பதாகவும், அந்த படத்தின் போஸ்டர்கள்தான் அவை என்று எடுத்துரைத்தார்.

அப்போது பேசிய வனிதா விஜயகுமார், ‘நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது என்னுடைய உரிமை. பெண்களைப் பற்றித் தொடர்ந்து இந்த சமூகம் அவதூறாக பேசி வருவதால்தான் தற்கொலைகள் அதிகரிக்கிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.