நடிகர் சிம்பு தனது வருங்கால மனைவியை தெரிவு செய்துவிட்டதாகவம், சிம்புவின் முடிவிற்கு தந்தை டி.ஆர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் மூத்த பிள்ளையான சிம்பவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் அவரது தம்பி மற்றும் தங்கைக்கு திருமணம் முடிந்துவிட்டதால் சிம்புவின் பெற்றோர்கள் கவலையில் இருக்கின்றனர்.
சிம்புவின் வாழ்க்கையில் காதல் என்பது நிலைக்காத ஒன்றாக இருக்கின்றது. ஆரம்பத்தில் இவரது காதல் தோல்வியை சந்தித்தது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இந்நிலையில் சமீபத்தில் ஈஸ்வரன் படத்தில் தன்னுடன் நடித்த நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாகவும், சிம்பு வீட்டில் தான் குறித்த நடிகை தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்து நிதி அகர்வால் விளக்கம் அளித்தார்.
நிதி அகர்வால் விளக்கத்தினையும் மீறி, இவர்கள் இருவரும் லிவ் இன் முறைப்படி வாழ்வதாக தற்போது கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி வெந்து தணிந்தது காடு பட வேலை முடிந்ததும் இவர்கள் திருமணம் நடக்கும் என்றும், நிதி அகர்வாலை மருமகளாக ஏற்றுக்கொள்ள டி.ஆர். சம்மதம் தெரிவித்துள்ளதாகவம் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புவின் வாழ்க்கையில் காதல் வருவதும், போவதுமாக இருக்கும் நிலையில், இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.