கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்
சாதாரண மக்கள் முதல் திரை பிரபலங்கள் வரை தங்களால் முடிந்த உதவி தொகையை வழங்குகிறார்கள்.

உதாரணத்திற்கு அஜித், இயக்குனர் முருகதாஸ், உதயநிதி, வெற்றிமாறன், திலீப் சுப்பராயன், சிவகார்த்திகேயன் என பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த தொகையை முதல்வரின் வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார்கள்.
இந்த நிலையில், தினகூலியை நம்பி இருக்கும் சினிமா தொழிலாளிகளுக்கு மற்ற நடிகர்கள் தங்களால் முடிந்த உதவியை கொஞ்சம் கொடுங்கள் என கேட்பதற்கு முன்பாகவே அஜித் மற்றும் மணிரத்னம் ஆளுக்கு 10 லட்சம் கொடுத்து உள்ளார்.
தற்போதைய செய்தி என்ன என்றால் சூர்யாவின் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 250 ரசிகர்கள் இந்த கொரோனா காலகட்டத்தில் மிகவும் வறுமையில் வாடி வருகிறார்கள்.
இதனை அறிந்த சூர்யா ஒவ்வொரு ரசிகனின் வங்கி கணக்கில் 5,000 செலுத்தி உள்ளார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், சிங்கம் சிங்கம்தான் என உற்சாகமாக கூறியுள்ளனர்.