• Sat. Sep 23rd, 2023

நடிகர் விஜயின் வழக்கில் வெற்றி!

Jan 26, 2022

நடிகர் விஜய் பயன்படுத்தி வரும் சொகுசு கார் மீதான இறக்குமதி வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி தொடர்ந்த வழக்கு சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டு அவருக்கு 1 லட்சம் ருபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

திரையில் மட்டும் சமூக நீதிக்காகப் பாடுபடுவது போல நடிகர்கள் இருக்கிறார்கள், வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது, நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும் என நீதிபதி கருத்து கூறி இருந்தார்.

இந்த கருத்தை நீக்க வேண்டும் என கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் விஜய். இந்த வழக்கில் தற்போது அவருக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துகள் நீக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.