• Sun. Dec 22nd, 2024

தனுஷுடன் நடிக்க சம்பளம் வேண்டாம் எனக் கூறிய நடிகை!

Feb 11, 2022

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் தனுஷின் பாலிவுட் படங்களும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தனுஷ் தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஹாலிவுட்டில் ரியான் கோஸ்லிங், சிஸ் எவன்ஸ் ஆகியோருடன் தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

தற்போது பெரும்பாலான நடிகைகள் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அவ்வாறு தனுஷ் கூட நடிக்க ஒரு ரூபாய் கூட சம்பளம் வேண்டாம் என ஒரு நடிகை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானவர் இந்துஜா ரவிசந்திரன். அதன்பிறகு பில்லாபாண்டி, மெர்குரி, மகாமுனி, பிகில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் திரவம் என்ற வலைத்தொடரிலும் இந்துஜா நடித்துள்ளார்.

இவர் தனுஷின் நானே வருவேன் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். செல்வராகவன், தனுஷ், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் படம் நானே வருவேன். செல்வராகவனுடன் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் உடன் நானே வருவேன் படத்தின் மூலம் இணைய உள்ளார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையை படத்தின் ஹீரோயின் இந்துஜா ரவிச்சந்திரன் தனுஷுடன் நடிப்பதற்கு ஒரு ரூபாய் கூட எனக்கு சம்பளமே வேண்டாம் என கூறி உள்ளார். தனுஷுடன் இணைந்து நடித்தால் சகலமும் கற்று கொள்ளலாம் என கூறியுள்ளாராம். இதனால் தயாரிப்பாளர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.