பொங்கலுக்கு வெளியாகவிருந்த நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. வருகிற மார்ச் மாதம் வலிமை திரைப்படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் வினோத் ஆகியோர் மூன்றாவதாக இணையவுள்ள படத்துக்கான முன்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக தகவல்கள் பரவின.
முன்னதாக வலிமை படத்தின் பின்னணி இசை வினோத்துக்கு பிடிக்காத காரணத்தால் யுவனுக்கு பதிலாக ஜிப்ரான் வலிமை படத்தின் பின்னணி இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜித்தின் 61 வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இருவரும் ஆசை, ராசி, பரமசிவன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக இந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிக்கவிருக்கிறாராம். ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடித்திருந்தார். கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளனர்.