விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தனக்கு தம்பி பாப்பா பிறந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ’சூப்பர் டீலக்ஸ்’.
இந்த படத்தில் விஜய்சேதுபதியின் மகன் ராசுகுட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த்.
இவரது நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ உட்பட ஒரு சில படங்களில் அஸ்வந்த் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அஸ்வந்த் தாயாருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை அடுத்து தனக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கிறான் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் அஸ்வந்த் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.