• Sun. Sep 24th, 2023

அவரை மறக்க முடியாது – யுவன் சங்கர் ராஜா உருக்கம்

Mar 1, 2022

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான படம் வலிமை.

இப்படத்தில் அவரது பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா சினிமாவில் அறிமுகமாகி 25 வருடங்கள் ஆவதையொட்டி சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற யுவன் சங்கர் ராஜா,
என்னோடு இந்த 25 ஆண்டுகள் பணியாற்றிய இயக்குநர்கள், தயாரிப்பபாளர்கள், இசையக்கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்தார்.

மேலும், மறைந்த நா. முத்துக்குமார் இடத்தை என்னால் வேறு வாருக்கும் தர முடியாது. அவர் சிறந்த பாடலாசிரியர். அவருடன் நிறைய படங்களி வேலை பார்த்திருக்கிறேன்.

இப்போது, பாடலாசிரியர் விவேக், பா.விஜய் ஆகியோருடன் பணியாற்றி வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.