இந்தி திரைப்பட நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே காதலருடன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஈஸ்வரி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஓய்வு நாட்களை கழிப்பதற்காக காரிலேயே கோவா சென்றுள்ளனர். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு, நேற்று முன்தினம் மும்பை திரும்பியுள்ளனர்.
இதன்போது கோவாவின் அர்போரா என்ற பகுதியில் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர குட்டையில் விழுந்தது.
அந்த குட்டையில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால், காருக்குள் இருந்த நடிகை ஈஸ்வரி மற்றும் காதலன் இருவரும் வெளிவர முடியாமல் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.