• Fri. Apr 12th, 2024

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இணைந்த நடிகை

Oct 22, 2021

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.

இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராமன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருவதாகவும் அவர் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி நடிகை ஸ்வாஸ்திகாகிருஷ்ணன் என்பவர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இவர் ஏற்கனவே ஜீவா நடித்த ‘கீ’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமின் ஜோடியாக நடிக்கவுள்ளார்.