• Sun. Feb 9th, 2025

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு கொரோனா

Dec 14, 2021

நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக அர்ஜுன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எல்லோருக்கும் வணக்கம், நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. நான் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன்.

என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் நலமாக இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். கட்டாயமாக முகக்கவசம் அணிய மறக்காதீர்கள்’ எனக் கூறியுள்ளார்.