• Fri. Dec 6th, 2024

விவாகரத்திற்குப் பின்னர் மகிழ்ச்சியாக இருக்கும் தனுஷ்

Mar 8, 2022

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவராக பார்க்கப்படும் தனுஷ் கதை, திரைக்கதை , வசனம், பாடகர் என அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என படு பிசியாக நடித்து வருகிறார்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் மனக்கசப்பினால் பரஸ்பர மனதுடன் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் தற்போது விவாகரத்துக்கு பிறகு தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கிங், காங், சீசர் என தன் செல்ல பிராணிகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.