• Tue. Jun 6th, 2023

தனுஷின் அடுத்த பட அப்டேட்

Jun 27, 2021

தனுஷின் அடுத்த படம் குறித்து தயாரிப்பாளரால் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் ’நானே வருவேன்’. சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமேதந்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே நடிகர் தனுஷ் ’தி கிரெ மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் பணியாற்றி வருவதாகவும் அவர் இந்தியா திரும்பியதும் ’நானே வருவேன்’ பட ஷூட்டிங் தொடங்கும் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று அப்படம் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளார் கலைப்புலி எஸ்.தாணு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி ’நானே வருவேன்’ பட ஷீட்டிங் தொடங்கும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் தனுஷ், சூப்பர் ஸ்டாரும் அவரது மாமனாருமான ரஜினிகாந்த் வீட்டினருகில் ரூ.150 கோடி செலவில் வீடு கட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.