• Sun. Jul 21st, 2024

மாஸ்டர் பட வசூல் சாதனை முறியடித்த டாக்டர்

Oct 19, 2021

டாக்டர் படம் விஜய்யின் மாஸ்டர் பட வசூல் சாதனை முறியடித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது,

தமிழ் சினிமாவின் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் படம் டாக்டர். இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அக்டோபர் 9 ஆம் தேதி ரிலீஸான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டாக்டர் படம் விஜய்யின் மாஸ்டர் பட வசூல் சாதனை முறியடித்துள்ளதெனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சிவகார்த்திகேயனின் டாக்டர் சினிமா அமெரிக்கா பாக்ஸ் ஆபீஸில் $440k க்கும் அதிகமாக வசூலை ஈட்டி விஜய்யின் மாஸ்டர் பட வசூலை முந்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.