சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற வதந்தி கொஞ்ச நாள்களாகவே உலவுகிறது.
‘அட, அப்படியெதுவும் இல்லப்பா’ என்று ஒரே வரியில் இரண்டு பேரில் யாராவது ஒருவர் கூறியிருந்தாலும், விஷயம் அத்தோடு முடிந்திருக்கும்.
ஆனால், சமந்தாவும் சரி, நாக சைதன்யாவும் சரி, இது குறித்து இன்றுவரை விளக்கம் அளிக்கவில்லை.
இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு வந்த சமந்தாவிடம் பிரபல செய்தி தொலைக்காட்சியின் நிருபர் இது குறித்து கேட்க, ‘கோவிலுக்கு வந்திருக்கிறேன், புத்தி இல்லை?’ என்று கோபமாக பதிலளித்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமந்தா இப்போது சாகுந்தலம் தெலுங்குப் படத்திலும், காத்து வாக்குல ரெண்டு காதல் தமிழ்ப் படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் முடிந்த பின் அவர் சினிமாவிலிருந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொள்வதாக கூறப்பட்டது.
அதற்கேற்ப புதிய சினிமா எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. இந்நிலையில், நாயகி மையப் படமொன்றில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடித்தி வருவதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.