• Tue. Dec 3rd, 2024

இளைய தளபதி விஜய் மகன், மகள் பெயரில் போலி சமூகவலைதள கணக்குகள்

Jun 15, 2021

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு ஜேசன் விஜய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சமூகவலைதளமான டுவிட்டரில் இவர்களின் பெயரில் போலியான முகவரி உடன் கணக்கு துவங்கி அதில் இவர்களின் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த டுவிட்டர் கணக்கு விஜய் மகன், மகள்களின் உண்மையான கணக்கு என நம்பி லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர்களை பின் தொடர்ந்து வருகின்றனர்.

ஆனால் இவை எதுவுமே விஜய் மகன், மகள்களின் உண்மையான கணக்குகள் அல்ல. அத்துடன் எந்த சமூக ஊடகங்களிலும் அவர்கள் இல்லை.

எனவே ரசிகர்கள் இதுபோன்ற போலி வலைதளங்களில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நடிகர் விஜய்யின் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சமீபகாலமாக பிரபலங்களின் பெயர்களில் சமூக ஊடகங்களில் போலியான கணக்குகள் துவங்கப்பட்டு வருவதாகவும் சில பிரபலங்கள் இது தொடர்பாக பொலிசில் புகார் அளித்து உள்ளதாகவும் கூறப்படுகின்றது.