விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் சிவகார்த்திகேயன். அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் இவரின் திரைப்படங்களுக்கு குழந்தை ரசிகர்கள் அதிக அளவில் இருந்தனர். இவரின் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் ஊதா கலரு ரிப்பன் என்ற பாடல் இன்றும் கூட குழந்தைகளின் விருப்பப் பாடலாக இருக்கிறது.
அந்த படத்திற்கு இசையமைத்தவர் முன்னணி இசையமைப்பாளர் டி இமான். அதைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால் சமீபகாலமாக அவர்கள் நட்பில் சிறு விரிசல் விழுந்துள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் தற்போது இசையமைப்பாளர் அனிருத்துடன் நட்பாக பழகி வருகிறார். சமீபத்தில் இவர்கள் கூட்டணியில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.
அதைத் தொடர்ந்து அவர்களின் நட்பு இன்னும் நெருக்கமாக உள்ளது. இதனால் சிவகார்த்திகேயன், இமானை கண்டுகொள்வதில்லை. இதனால் அவர் சிவகார்த்திகேயன் மீது மன வருத்தத்தில் இருக்கிறார். இதன் காரணமாகவே தன்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயனுக்கு, இமான் மறுநாள்தான் நன்றி தெரிவித்து ரிப்ளை செய்துள்ளார்.
இதைப் பார்த்த பலரும் சிவகார்த்திகேயன், அனிருத்துடன் நெருக்கமாகி விட்டதால் தான் இமான் இவ்வளவு கோபத்தில் இருக்கிறார் என்று கருதுகின்றனர். நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திற்குப் பிறகு இமான், சிவகார்த்திகேயனின் எந்தத் திரைப்படத்திற்கும் இசை அமைக்காதது குறிப்பிடத்தக்கது.