முதன்முறையாக பாவனிக்கு முத்தம் கொடுத்த விஷயம் குறித்து அமீர் ஓபன் டாக் கொடுத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அமீர்.
இவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இவர் மற்றும் பாவனி காதல் குறித்து நிறைய கிசுகிசுக்கப்பட்டது. நிகழ்ச்சியினிடையே அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்தார்.
இந்நிலையில், முதன்முறையாக முத்தம் கொடுத்த விஷயம் குறித்து அமீர் ஓபன் டாக் கொடுத்துள்ளார். அதில் நான் பாவனிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்கவில்லை எனவும், அவருக்கு தெரிந்து தான் கொடுத்தேன் என கூறியுள்ளார்.
மேலும், அப்போது இருந்த காதல் உணர்வால் அவருக்கு கொடுத்து விட்டேன் எனவும், இப்போது வரைக்கும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என கூறியுள்ளார்.