• Fri. Dec 6th, 2024

தோனிக்கு 36 முறை ஆக்‌ஷன் சொன்னேன்…! விக்னேஷ் சிவன்

Feb 21, 2022

போடா போடி தானா சேர்ந்த கூட்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கி விக்னேஷ் சிவன் தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

அடுத்த படத்திற்கு தயாராகி கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன், மகேந்திர சிங் தோனி வைத்து விளம்பரம் ஒன்றை அவர் இயக்கியுள்ளார்.
இருவரும் இணைந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் விஜய் மற்றும் அஜீத் ஆகியோருக்கு எந்த அளவுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதே அளவுக்கு மகேந்திர சிங் தோனிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

திரைப்பிரபலங்கள் பலரும் தோனியின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். அப்படி மகேந்திர சிங்கின் தீவிர ரசிகர்தான் விக்கேஷ் சிவன். நீண்ட நாட்களாக அவரை பார்க்க வேண்டும் என்கிற கனவு தற்போது நிறைவேறியுள்ளது.

என்னுடைய அம்மா காவல்துறை அதிகாரி என்பதால் ஐபிஎல் போட்டி நடைபெறும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு வீரர்கள் இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது , நான் பார்க் ஷெராடன் ஓட்டலின் ஒரு ஒரத்தில் நின்று கொண்டு தோனியை பார்த்து நெகிழ்ந்து இருக்கிறேன்.என் அம்மா தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்போதிலிருந்து எப்படியாவது அவரை சந்தித்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் ஆசையாக மாறிவிட்டது. என்னுடைய வெற்றி, தோல்வி, ஷூட்டிங் நேரம் என பல நேரங்களில் அவரை ரோல் மாடல் நான் எப்போதும் தோனியை பின்பற்றுவேன்.

தோனி ஒரு எளிமையான மனிதரை போல் நடந்து கொண்டார். அவருடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் என்னுடைய வாழ்வில் மிகவும் சிறப்பான தருணங்களாக அமைந்திருந்தது.

என் நீண்ட நாள் கனவு ஆசை நிறைவேறியது. எனப் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.