• Sat. Jul 27th, 2024

உள்ளே இருந்திருந்தால் அபிஷேக்கை வச்சு செஞ்சிருப்பேன் – நாடியா சாங்

Oct 20, 2021

நான் மட்டும் இன்னும் ஒரே ஒரு வாரம் உள்ளே இருந்திருந்தால் அபிஷேக்கை வச்சு செஞ்சிருப்பேன் என பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நாடியா சாங் பேட்டி அளித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக வெளியேறியவர் மலேசியாவை சேர்ந்த நாடியா சாங் என்பதும் இவர் பிக் பாஸ் வீட்டில் அமைதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன்னிடம் அபிஷேக் அடிக்கடி வம்புக்கு இழுத்ததாகவும், தனக்குள் இருந்த மிருகத்தை எழுப்பி வரும் வகையில் கோபப்படுத்தியதாகவும் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும் இன்னும் ஒரே ஒரு வாரம் மற்றும் நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து இருந்தால் அபிஷேக்கை வச்சு செய்து இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதால் தனது மூன்று குழந்தைகளையும் மிஸ் செய்ததாகவும் ஒரு வகையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது தனக்கு மகிழ்ச்சி தான் என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.