• Thu. Oct 31st, 2024

இமயமலையில் ஜோதிகா; வைரலாகும் காணொளி

Sep 9, 2021

சுதந்திர தினத்தன்று இமயமலையில் 70 கிலோமீட்டர் தூரம் டிரெக்கிங் சென்ற ஜோதிகாவின் காணொளி வைரலாகியுள்ளது.

சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, ‘36 வயதினிலே’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இதன்பின்னர் ‘மகளிர் மட்டும்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’, ‘பொன்மகள் வந்தாள்’ என அடுத்தடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்தார்.

இந்த படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தன.

தற்போது இவர் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்நிலையில் குறித்தபடம் வருகிற அக்டோபர் மாதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த நடிகை ஜோதிகா, தற்போது முதன்முறையாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தன்று இமயமலையில் 70 கிலோமீட்டர் தூரம் டிரெக்கிங் சென்றுள்ளார் ஜோதிகா,

அந்த வீடியோவை தான் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வைரலாகி வரும் இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்து உள்ளனர்.