• Wed. Oct 23rd, 2024

இளம் இயக்குனர்களிடம் கதை கேட்கும் கார்த்தி

Jan 20, 2022

நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்துக்காக பல இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி இப்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் தான் நடிக்கும் படங்களுக்கான கதையை இப்போதே கேட்க ஆரம்பித்து வருகிறார்.

இதுவரை 23 படங்களில் நடித்துள்ள கார்த்தி அடுத்து தனது 24 ஆவது படத்துக்கு இளம் இயக்குனர்களான அருண் ராஜா காமராஜா மற்றும் 8 தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ் ஆகியோரிடம் கதை கேட்டுள்ளாராம்.

அடுத்து தன்னுடைய 25 ஆவது படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கதையில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். அந்த படம் ஏதாவது ஒரு பயோபிக் படமாகவோ அல்லது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படமாகவோ இருக்கலாம் என சொல்லப்படுகிறது.