• Thu. Nov 30th, 2023

அட்டகாசமான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் – ரசிகர்கள் கொண்டாட்டம்

Jul 12, 2021

தல அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

ஒரு நிமிடம் 23 விநாடிகள் ஓடும் இந்த போஸ்டரை அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நீரவ்ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய அளவில் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

மேலும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று மோஷன் போஸ்டர் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் முழுக்க முழுக்க கிராபிக்ஸில் அமைந்துள்ள இந்த மோஷன் போஸ்டரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது