• Sat. Dec 7th, 2024

மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா

Mar 5, 2022

தமிழ் திரைத்துறையில் பொருத்தமான ஜோடியாக நயன்தாரா – ஜெயம் ரவி இருவருக்கும் ஒரு பெயர் உண்டு. இவர்கள் சேர்ந்து நடித்த தனி ஒருவன் படம் பெரிய வெற்றி பெற்றது.

அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. பெரிய இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.

இந்தப் படத்தை அஹமத் இயக்குகிறார். இவர் மனிதன், என்றென்றும் புன்னகை போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் நயன்தாரா புதிய கார் வாங்கியிருக்கிறார்.

சென்னை பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் காருக்கு பூஜை போட்ட புகைப்படம் இணையத்தில் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.