
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய செறுள்ளனர்.
அப்போது அங்கு வந்த சென்னை மாநகராட்சியின் புதிய பெண் மேயர் பிரியா ராஜனை சந்தித்து பேசி, இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.