• Thu. Jan 16th, 2025

வலிமை தொடர்பில் கசிந்த புதிய தகவல்!

Jul 17, 2021

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்ட நிலையில், புரமோஷன் பணிகளும் சமீபத்தில் தொடங்கிவிட்டன. முதல் கட்டமாக ’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ’வலிமை’ படத்தின் பாடல்கள் விரைவில் ரிலீஸ் ஆகும் என யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் தெரிவித்து இருந்தார். தற்போது ’வலிமை’ டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

’வலிமை’ படத்தின் டீசரை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.