நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகின்றனர்.
தமிழில் இவர்கள் தொடர்ந்து தனித்தனியாக படங்களில் நடித்துவந்த நிலையில், யாகாவாராயினும் நா காக்க மற்றும் மரகதநாணயம் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர்.
இந்த இரு படங்களும் இவர்களுக்கு சிறப்பாக அமைந்தன. சொந்த வாழ்க்கையிலும் இந்தப் படங்கள் இவர்களுக்கு முக்கியமாக அமைந்துள்ளன.
இந்தப் படங்களில் நடிக்கும்போது தான் இவர்கள் காதலில் விழுந்தனர். இந்தக் காதல் இந்தப் படங்களின்போதே பரவலாக கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் இந்த விஷயத்தை இவர்கள் ஏற்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. தொடர்ந்து இவர்களின் காதல் பேசுபொருளாக இருந்தது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஆதி, தான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன் என்றும் விரைவில் இதுகுறித்து அறிவிப்பேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தற்போது ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது.
விரைவில் திருமண தேதி குறித்து அறிவிப்பை இந்த ஜோடி வெளியிடவுள்ளது.
தமிழில் நிக்கி கல்ராணி நடிப்பில் அடுத்ததாக இடியட் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.