தமிழன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட்டில் பிசியான நடிகையாகி இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தொடர்ந்து பல பதிவுகளை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்கிறார்.
இன்ஸ்டாகிராமில் 7.3 கோடிக்கும் அதிகமானோர் நடிகை பிரியங்கா சோப்ராவை பின்தொடர்கின்றனர்.
இன்ஸ்டாகிராமில் அதிக பணம் பெறும் பாலிவுட் பிரபலங்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர்.
ஆம், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் ஒரு பதிவிற்கு, ஏறக்குறைய ரூ. 1.8 கோடி வரை வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.