• Sun. Jan 19th, 2025

தனி விமானம் மூலம் குடும்பத்துடன் பறந்த ரஜனி

Jun 19, 2021

தனி விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.

ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அவர் அமெரிக்கா செல்வதற்கான தனி விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்கா செல்வார்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இதன்படி, தனி விமானம் மூலம் இன்று(19) அதிகாலையில் சென்னையில் இருந்து ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கி ஓய்வு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.