• Fri. Apr 19th, 2024

புதுஅவதாரம் எடுக்கும் வைகைப்புயல் வடிவேலு; என்ன தெரியுமா?

Aug 6, 2021

வைகைப்புயல் வடிவேலு காமெடி நிகழ்ச்சியை வடிவேலு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவுண்டமணி-செந்தில் இவர்கள் சினிமாவில் செய்த காமெடி இப்போதும் மக்களிடம் ரசிக்கப்படுvஅதுடன் அது தொடர்பில் பேசவும் படுகிறது.

அப்படி அவர்களின் வரிசையில் காமெடியனாக பல படங்களில் நடித்து இப்போது ஒரு டிரண்ட் செட்டராக இருப்பவர் நடிகர் வடிவேலு.

காரணம் எந்த ஒரு விஷயத்தையும் மக்களிடம் போய் சேர்க்க மீம் கிரியேட்டர்கள் இவரது படத்தை தான் பயன்படுத்துகிறார்கள்.

எல்லா விஷயத்துக்கும் இவரது முக பாவனைகள் இருந்து விடுகிறது. தொடர்ந்து இவர் படம் நடிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசை.

தற்போது இவர் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அதாவது OTT தளமான ஆஹா தமிழில் கால் பதிக்க உள்ளாராம்.

இதில் வரும் ஒரு காமெடி நிகழ்ச்சியை வடிவேலு தொகுத்து வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.