• Fri. Mar 29th, 2024

வெளியானது அஜித்-61 படத்தின் முக்கிய அப்டேட்

Nov 27, 2021

அஜித்-61 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச் வினோத்தே இயக்கவும், போனி கபூர் தயாரிக்கவும் உள்ளார். இந்தப் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாகவும், இப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது டுவிட்டரில் #Thala61 என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.