• Thu. Oct 31st, 2024

வெளியானது தளபதி 65 பெர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Jun 21, 2021

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடித்துவரும் அவரின் 65வது படத்திற்கு ‘பீஸ்ட்’ (‘Beast) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டதுடன் படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் இதுவரை தளபதி 65 எனக் குறிப்பிடப்பட்டு வந்தது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோர்ஜியாவில் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக சென்னையில் ஏற்பாடான நிலையில், கொரோன 2-வது அலையின் தீவிரத்தால் படப்பிடிபபு பணிகளும் நிறுத்தப்பட்டன.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால், விரைவில் ‘தளபதி 65’ படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. நாளை ஜூன் 22 ஆம் திகதி விஜய் தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார்.

விஜய் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் ‘தளபதி 65’ படத்தின் பெபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில். இப்படத்துக்கு பீஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளதுதுடன் படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

இதை தளபதி விஜய் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.